கடந்த ஐந்து ஆண்டுகளாக செயற்படாமல் உள்ள விளையாட்டு பாடசாலைகள்
திறமையான தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 22 விளையாட்டுப் பாடசாலைகள் கடந்த ஐந்து வருடங்களாக இயங்கவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இப்பாடசாலைகளில் பயிலும் 293 விளையாட்டு புலமைப்பரிசில் பெற்ற மாணவர்கள் அந்தப் பாடசாலைகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும், விளையாட்டுப் பாடசாலைகளிலுள்ள விளையாட்டு உபகரணங்களும் பயன்படுத்தப்படாமையால் பயனற்ற நிலையில் உள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
1989 ஆம் ஆண்டு விளையாட்டுப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது
1989 ஆம் ஆண்டு விளையாட்டுப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, எதிர்பார்த்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் அவற்றின் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதனால் அந்த பள்ளிகளில் தங்கும் விடுதிகள், விளையாட்டு உபகரணங்கள், உடற்கட்டமைப்பு உபகரணங்கள் போன்றவை பயன்படுத்தப்படாமல் உள்ளன.
பல்வேறு குறைபாடுகள்
முகாமைத்துவ குறைபாடுகள், முறையான பயிற்சியின்மை மற்றும் விளையாட்டுப் பாடசாலைகள் இயங்காமை என்பன அவற்றில் இடம்பெற்றிருந்த விளையாட்டு புலமைப்பரிசில் பெற்றவர்களின் பதவி விலகலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |