22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் கைது
கந்தானை (Katana) - கந்தேவத்த பகுதியில் திருட்டுச் சம்பவமொன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தானை காவல்துறையினர் முன்னெடுத்திருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே நேற்று (02) மாலை குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் மதுரங்குளிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவருகிறது.
காவல்துறையினர் விசாரணை
இதன்போது சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், சந்தேகநபருக்கு எதிராக கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தளம் (Puttalam) மற்றும் நீர்கொழும்பு (Negombo) நீதிமன்றங்கள் 22 திறந்த பிடியாணைகளை பிறப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |