யாழில் கோர விபத்து: கனடா செல்ல இருந்த இளைஞன் பரிதாப உயிரிழப்பு
யாழ்ப்பாணம் (jaffna) - மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (26.5.2024) ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி - புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் சாவகச்சேரி - மட்டுவில் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
கனடா பயணமாக இருந்த நிலை
புத்தூர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மதிலொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த இளைஞர் இன்று கனடாவுக்கு பயணமாக இருந்த நிலையில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞன், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
