சூடுபிடிக்கும் தேர்தல் களம் : தீவிரமாக்கும் 22 ஆம் திருத்தச்சட்டமூலம்
நாடாளுமன்றத்தில் எதிர்வரும் வாரங்களில் 22 ஆம் திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்படமாட்டாது என அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று இடம்பெற்ற நிலையில் இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தேர்தலுக்கு பின்னர் 22 ஆம் திருத்த சட்டமூலம் முன்வைக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பெரும்பான்மை ஆதரவு
இந்நிலையில் 22 ஆம் திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவு கிடைக்காவிட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றை கலைப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், அதிபர் தேர்தல் நடைபெறும் வரை அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Vijayadasa Rajapaksa) நீதியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றில் இந்த சட்ட மூலத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெற்றுக்கொள்வதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) சவால்களை எதிர்நோக்குவதால் நாடாளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |