22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டி - வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை வீரர்
Sri Lanka
Commonwealth Games
By Vanan
22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டி
22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், இலங்கை வீரரான யுபுன் அபேகோன், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவர் தனது தூரத்தை ஓட எடுத்த நேரம் 10.14 வினாடிகளாக பதிவாகியுள்ளது.
வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை வீரர்
இதன்மூலம், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை யுபுன் அபேகோன் ஏற்படுத்தியுள்ளார்.
இதேவேளை, பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான எஃப்42-44/61-64 தட்டெறிதல் பரா போட்டியில் இலங்கையின் பாலித ஹல்கஹவெல கெதர வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
