வீட்டிற்குள் பாம்பு வராமல் தடுக்கும் சூப்பர் டிப்ஸ்
மனிதர்கள் வாழும் பகுதிகளில் பாம்புகள் வருவது சகஜமான ஒன்று தான். குறிப்பாக மழைக்காலங்களில் பாம்புகள் புகலிடம் தேடி வீடுகளுக்குள் வர வாய்ப்புள்ளது.
அதுவும் விஷப்பாம்புகள் வந்தால், அவை மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
எனவே, பாம்புகள் நம் வீட்டின் அருகே வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
பாம்புகள் வராமல் தடுக்க செய்ய வேண்டியவை
பூனை அல்லது நாய் வளர்ப்பது
உங்கள் வீட்டிற்கு வெளியே அல்லது சுற்றுப்புறங்களில் உள்ள குப்பைகளை ஒன்று சேர்க்காமல் அவ்வப்போது அகற்றி விடவும். குப்பைகள் இருந்தால் எலி வரும். எலி இருந்தால் பாம்புகள் வரும்.
வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். பிளீச்சிங் பவுடர் கலந்த நீரை வீட்டை சுற்றி தெளித்து விடலாம்.
பூனைகள், நாய்கள் பாம்புகளைக் கண்டறிந்து விரட்டும் திறன் கொண்டவை. எனவே, வீட்டில் பூனை அல்லது நாய் வளர்ப்பது பாம்புகளைக் கட்டுப்படுத்த உதவும்.
பாம்பு விரட்டும் பொருட்கள்
கடைகளில் பாம்பு விரட்டும் பல்வேறு பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வீட்டின் சுற்றுப்புறத்தில் தெளிப்பதன் மூலம் பாம்புகளை விரட்டலாம்.
குறிப்பாக வேப்பெண்ணெய் ஒரு சிறந்த பாம்பு விரட்டியாகும்.
வேப்பெண்ணெயை வீட்டின் சுற்றுப்புறத்தில் ஸ்பிரே போல் தெளித்துவிட்டால், அந்த வாசனைக்கு பாம்புகள் வராது.
செடிகளின் வாசனை
சில செடிகளின் வாசனையை பாம்பினால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அந்த செடிகளை வீட்டை சுற்றி வளர்க்கலாம்.
கற்றாழை, துளசி, சாமந்தி, ஓமவல்லி, கற்பூரவல்லி ஆகியவற்றை வளர்க்கலாம். அதன் வாசனை மிகவும் விசித்திரமானது, பாம்புகள் அதை மணக்க ஆரம்பித்தவுடன் ஓடி விடுகின்றன.
இயற்கையான பண்புகள் நிறைந்த இந்த செடியின் வேர்கள் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் உள்ளன.
இலைகள் பிரகாசமான பச்சை நிறத்தில் உள்ளன. இதனால் பாம்புகள் அப்பகுதியில் இருந்து விலகி ஓடி விடுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
