மட்டக்களப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 23 சாரதிகள் அதிரடியாக கைது!
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka
Law and Order
By Bavan
மட்டக்களப்பில் மதுபோதை மற்றும் மதுபானம் பாவித்த நிலையில் வாகனங்கள் செலுத்திய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (11-11-2026) இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் பாவித்து வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்டறியும் விசேட சோதணை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இதன்போதே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இதில் காத்தான்குடியில் 15 பேரையும், ஏறாவூரில் ஐந்து போரையும் மற்றும் வாழைச்சேனையில் மூன்று பேருமாக 23 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களை அந்தந்த பகுதியில் உள்ள நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




மரண அறிவித்தல்