இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்ட மிருசுவில் படுகொலையின் 23 ஆண்டு நினைவேந்தல்!
ஈழத்தமிழர்களின் வரலாறு என்பது இழப்புகளையும் அதன் பாடங்களின் மூலமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஈழத்தமிழர்கள் தமது தாயக நிலப்பகுதியில் அனுபவித்த கொடுமைகள் என்பது சொல்லி மாள முடியாதவை வரலாற்றில் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு இனமாக தமது சொந்த நிலங்களிலையே அகதிகளாக அலைந்து திரிய வேண்டிய அவலநிலையில் சொல்லெனாத்துயரங்கள் அனுபவித்த ஈழத்தமிழ் மக்கள் அடிக்கடி சிங்கள அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளால் கொல்லப்பட்டும் நிலம் பறிக்கப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டிக்கிறார்கள்
வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் எங்கும் மலிந்துகிடக்கின்ற இந்த துயரங்கள் அடிக்கடி படுகொலைகளாக நிகழ்ந்து ஈழத்தமிழ் மண்ணை இரத்தத்தினால் நனைத்திருக்குறது வடக்கில் வல்வெட்டித்துறை முதல் தென்கிழக்கில் வீரமுனை வரை நமது தாயகத்தின் ஒவ்வொரு கிராமங்களின் மீதும் சிங்கள இனவெறியர்களின் படுகொலைக்கரங்கள் நீண்டன.
அந்தக்கரங்களுக்கு குழந்தைகள் என்றோ பெண்கள் என்றோ வயோதிபர்கள் என்றோ வேறுபாடுகளோ வித்தியாசங்களோ எதுவுமே இல்லை எனலாம் அப்படியாக துயரங்களின் மேல் பதிந்த ஒரு கொடூரமாக நிகழ்ந்து முடிந்தது.
இராணுவத்தின் கொலை
மிருசுவில் படுகொலைகள்
இடம்பெயர்ந்து யாழ் நகரத்தில் வசித்துக்கொண்டிருந்த ஊரைப் பார்க்கவென மிருசுவில் கிராமத்தவர்கள் எட்டுப் பேர், 2000ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 19ஆம் திகதி 10 மணியளவில் மீண்டும் ஊருக்கு வந்தனர்.
அவர்களில் ஒரு சிறுவன் கொய்யாப் பழமொன்றை பறித்துத் தரும்படி கேட்க அதனை பறித்துக்கொடுக்க கொய்யா மரத்தை நெருங்கியபோது கத்தியுடனும் துப்பாக்கியுடனும் இராணுவத்தினர் அவர்களை சூழ்ந்து கொண்டனர். பின்னர் மேலும் சில இராணுவத்தினரை அவர்கள் அழைத்து வந்தனர்.
மிருசுவிலில் சடலமொன்று புதைக்கப்பட்டதை கண்டனர். மீண்டும் ஊர் மக்களுடன் அந்த சடலத்தை அடையாளம் காண இவர்கள் வந்துள்ளனர். அத்துடன் உள்ளுர் அரச அதிகாரிகளின் அனுமதியுடன்தான் அவர்கள் வந்திருந்தனர்.
அங்கு வந்து புதைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் சடலத்தை அடையாளம் காண முற்பட்டபோது அவர்கள் அரச படைகளால் சிறைப் பிடிக்கப்பட்டனர்.
ஏற்கனவே இராணுவத்தால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தை அடையாள காண முற்பட்டவேளையிலேயே இவர்களும் சடலாக்கப்பட்ட துயரம் நிகழ்ந்தது
டிசம்பர் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட அந்த மக்கள் டிசம்பர் 20 வரை தொடர் சித்திரவதைக்கு உள்ளடக்கப்பட்டது நிலையில், குழந்தைகள் உட்பட எட்டுப்பேர் டிசம்பர் 20ஆம் திகதி அரச படைகளினால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
மனிதம் மரித்து மனங்கள் கல்லானவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலைகள் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் என்றுமே மறந்துவிடமுடியாத ரணங்களாகும் இராணுவத்தின் கொலைமுக பார்வைக்குட்பட்டு அவர்களின் கொடிய கொலைக்கரங்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை இன்றைய நாளில் ஈழத்தமிழர்களின் வரலாற்று வலிகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் Ibc Tamil. கனதியான வலிகளோடு நினைவேந்துகுறது