மன்னாரில் காற்றாலை கோபுரங்களுக்கு எதிராக தொடரும் போராட்டம்
மன்னாரில் (Mannar) காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 23 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்றைய தினம் (25) மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு இசைமாலைத்தாழ்வு கிராம பெண்கள் அமைப்பினர் உள்ளடங்களாக இசைமாலைதாழ்வு கிராமத்தை சேர்ந்த அனேகமானோர் வருகை தந்து கலந்துகொண்டுள்ளனர்.
ஏராளமான பெண்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு, மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டமானது காலத்தின் தேவை கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்து கொண்டு தாம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் மற்றும் தொடர்ந்தும் தமது ஆதரவு இப்போராட்ட குழுவிற்கு கிடைக்கும் எனவும் இசைமாலைதாழ்வு கிராம பெண்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

