வடக்கு - கிழக்கு மக்களுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Sri Lankan Tamils Jaffna chemmani mass graves jaffna
By Shalini Balachandran Aug 25, 2025 01:07 PM GMT
Report

🛑 புதிய இணைப்பு 

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு மற்றும் கிழக்கு பாரிய கையொழுத்து போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த போராட்டமானது எதிர்வரும் 29 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (25) தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு

குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு

சர்வதேச விசாரணை

இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.


ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழீழ விடுதலைக்கழகத்தின் தலைவர் த. சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , சமத்துவ கட்சியின் பொது செயலாளர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோருடன் தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் குறித்த சந்திப்பில் பங்கு பற்றி இருந்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் பல்வேறு இடங்களில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் பெரும்பாலன புதைகுழிகள் வடக்கு கிழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது.

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

மனித புதைகுழி

தற்போது செம்மணி மனித புதைகுழிகளில் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றது அதில் 140 இற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றில் 90 வீதமானவை ஆடைகள் அற்ற நிலையிலையே மீட்கப்பட்டுள்ளன அத்துடன் குழந்தைகளின் எழும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

வடக்கு - கிழக்கு மக்களுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Tamil Leaders Discuss Chemmani Human Rights

அவற்றுக்கு சர்வதேச விசாரணைகள் கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பில் அகழ்வு பணிகள் முன்னெக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தே கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

வித்யா படுகொலை குற்றவாளிகளுக்கு உயர் நீதிமன்று வழங்கிய காலக்கெடு

வித்யா படுகொலை குற்றவாளிகளுக்கு உயர் நீதிமன்று வழங்கிய காலக்கெடு

🛑 முதலாம் இணைப்பு

யாழ் (Jaffna) செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் சந்திபொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஒன்று கூடல் யாழ்ப்பாணத்தில் இன்று (25) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் கூட்டாகவும், அதேநேரம் தனித்தனியாகவும் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு தீர்மானங்களையும் எடுத்திருக்கின்றன.

அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி

அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி

தமிழ்க் கட்சிகள் 

இந்தநிலையில், யாழ். நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (25) காலை தமிழ்க் கட்சிகள் பலவும் மீண்டும் ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு - கிழக்கு மக்களுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Tamil Leaders Discuss Chemmani Human Rights

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் இணைத் தலைவர்களும் அதேபோன்று ஏனைய சில கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தச் சந்திப்பின் முடிவில் தமிழ்க் கட்சிகள் இணைந்து இன்று (25) மதியம் விசேட ஊடக சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்கு ஆதரவளிக்க சென்று சர்ச்சையில் சிக்கிய சுமந்திரன்!

ரணிலுக்கு ஆதரவளிக்க சென்று சர்ச்சையில் சிக்கிய சுமந்திரன்!

பிரதி காவல்துறை மா அதிபர் அதிரடியாக கைது

பிரதி காவல்துறை மா அதிபர் அதிரடியாக கைது

You May Like this 


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026