மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 23ஆவது நினைவேந்தல் நிகழ்வு
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 23ஆவது நினைவேந்தல் நிகழ்வும் நினைவுப் பேருரையையும் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் 3 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவ படத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், குமர் பொன்னம்பலத்தின் புதல்வருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்து ஈகை சுடரும் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும், பொதுமக்களும் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூபி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
நினைவுப் பேருரை
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட நுண்கலைத்துறை முன்னாள் தலைவர் கலாநிதி க.சிதம்பரநாதன் நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுப் பேருரையினை ஆற்றியிருந்தார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், மத குருமார்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/7f0b7f36-944e-4d32-9575-9ffa8ffa6fa7/23-63b8cc36d5b97.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/8dcbec12-f1c3-41d2-bc47-e4fa34c3cc9b/23-63b8cc3724996.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
![ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?](https://cdn.ibcstack.com/article/02ea68d2-1a0a-455a-beb8-b3f401d35089/25-67a5ba9954168-md.webp)
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 20 மணி நேரம் முன்
![எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !](https://cdn.ibcstack.com/article/cecc0af8-9c16-41aa-81f4-a89effdfc827/25-67a1daf656617-sm.webp)