வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்
மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்யொன்றை நடத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முடிவு செய்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மாகாண மட்டத்தில் இந்த வேலைவாய்ப்பு சந்தைகளை நடத்தி வருகிறது.
இதன்படி, மேல் மாகாண வேலைவாய்ப்பு சந்தை எதிர்வரும் சனிக்கிழமை (23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கம்பஹாவில் உள்ள யசோதரா தேவி பெண்கள் பாடசாலை வளாகத்தில் நடைபெற உள்ளது.
வேலை வாய்ப்புகள்
இந்த வேலைவாய்ப்பு சந்தை திட்டத்தின் போது, இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கும்.
இதேவேளை, அன்றைய தினம் பங்கேற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடுபவர்களும் பணியகத்தின் வேலைவாய்ப்பு வங்கியில் பதிவு செய்யப்படுவார்கள்.
அத்தோடு, இலங்கை அரசாங்கம், ஜப்பான், இஸ்ரேல் மற்றும் தென் கொரியாவுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பணியகத்தின் உரிமம் பெற்ற 25 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதுடன், அந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும், அவற்றுக்கு விண்ணப்பிப்பதற்கும், வேலைகளைப் பெறுவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
அத்துடன், வேலைகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பும் இங்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக மேல் மாகாணத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் 123 பிள்ளைகளுக்கு ரூ.3.75 மில்லியன் மதிப்புள்ள புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேற்கு மாகாண அலுவலகமும் சந்தைப்படுத்தல் பிரிவும் இணைந்து இந்த வேலைவாய்ப்பு சந்தை திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
இதன்படி, குறித்த திட்டத்தை எதிர்காலத்தில் மற்ற மாகாணங்களிலும் நடத்த பணியகம் எதிர்பார்த்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
