வரி அதிகரிப்பு - இறக்குமதியான அப்பிள்கள் மிருககாட்சிசாலைக்கு கையளிப்பு (படம்)
வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதியாளர்களால் கைவிடப்பட்ட 24 ஆயிரம் கிலோ கிராம் அப்பிள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கையளிக்கப்பட்ட அப்பிளின் பெறுமதி 20 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.
அப்பிள்கள் மிருகக்காட்சிசாலைக்கு
இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக அப்பிள் கொள்கலன் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியிருந்ததால், அதன் உரிமையாளர் பொருட்களை நிராகரித்துள்ளார்.
இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட அப்பிள்களை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த அப்பிள் கொள்கலன்களை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இலங்கை துறைமுக அதிகார சபையும் சி.அய்.சி.டி நிறுவனமும் இணைந்து மேற்கொள்ளவுள்ளன.
அப்பிள் கொள்கலன்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில், துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர, துறைமுக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் பிரசன்ன ஜயமான்ன உப தலைவர் கயான் அலகியவத்தகே மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஆர்.சி.ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொண்டனர்.


