கொழும்பில் மோசமடைந்துள்ள காற்றின் தரம்: பொது மக்களுக்கு எச்சரிக்கை
Colombo
Sri Lanka
Air Pollution
By Shadhu Shanker
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று கொழும்பில் காற்றின் தரக் குறியீடு 127 ஆக பதிவாகியுள்ளது.
இந்த காற்று மாசானது உணர்திறன் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோசமடைந்துள்ள காற்றின் தரம்
இதேவேளை, காலி கராப்பிட்டியில் 90 ஆகவும், புத்தளத்தில் 88 ஆகவும், குருநாகல் மற்றும் அனுராதபுரத்தில் 86 ஆகவும் காற்று மாசு சுட்டெண் பதிவாகியுள்ளது.
மேலும், நாட்டின் காற்று மாசுக் குறியீடு 50ஐத் தாண்டியிருப்பதால், மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இது குறித்து கவனம் செலுத்துமாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி