250,000 டொலர் சன்மானம் - கவலையில் வாடும் குடும்பத்தின் அறிவிப்பு! ஏன் தெரியுமா...
கனடாவின் ரொறன்ரோவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று 250,000 டொலர் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
வ்லீபோ (Vleepo) என்ற நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மொத்திவ் ஸ்டாய்கோஸ் என்பவரின் மரணம் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கே இந்த சன்மானத் தொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு யோர்க்வில் அவன்யூவில் வைத்து 37 வயதான ஸ்டாய்கோஸ் சுட்டு கொல்லப்பட்டார்.
ஸ்டாய்கோஸின் மரணம்
ஸ்டாய்கோஸ் கொல்லப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் இந்த 250,000 டொலர்கள் சன்மான அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
ஸ்டாய்கோஸின் மரணம் பெரும் வேதனையை அளிப்பதாகவும் தொடர்ந்தும் குடும்பத்தினர் துயரத்தில் வாடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் காவல்துறையினர் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
