படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவு நாள்

Sri Lankan Tamils Jaffna Journalists In Sri Lanka
By Independent Writer Oct 19, 2025 03:37 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) போர்க்காலத்தில் துணிகரமாக செயற்பட்ட முன்னணி ஊடகவியலாளர்களில் ஒருவரான மயில்வாகனம் நிமலராஜன் (Mylvaganam Nimalrajan) படுகொலையின் 25ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த வேளை சிறிலங்கா இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்த அவரது வீட்டுக்குள் வைத்து ஆயுதாரிகளால் நிமலராஜன் சுட்டுக்கொல்லபட்டார்.

இந்த தாக்குதல் நடத்தபட முன்னர் நிமலராஜனின் தந்தையும் கத்திக்குத்துக்கு இலக்காகியிருந்தார்.

இஷாரா செவ்வந்தியின் காதலர்...! ஆட்டம் காண வைக்கும் பெண்: அவிழும் முடிச்சுகள்

இஷாரா செவ்வந்தியின் காதலர்...! ஆட்டம் காண வைக்கும் பெண்: அவிழும் முடிச்சுகள்

படுகொலைக்கு நீதி கிட்டவில்லை

அன்றைய நாட்களில் ஐபிசி உட்பட்ட ஊடகங்களுக்கு போர்கால நிலவரங்களையும், ஆக்கிரமிப்புக்கு உள்ளான யாழ்குடாவில் ஆயுதக்குழுக்கள் செய்த அடாவடிகள் குறித்தும் மிக துணிகரமான செய்திகளை வழங்கிய நிமலராஜன் தான் இறுதியாக எழுதிக் கொண்டிருந்த செய்தி ஆக்கத்தின் தாள்களின் மேலேயே தனது உயிரைத்துறந்திருந்தார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் | 25Th Year Assassination Of Journalist Nimalarajan

அவரை படுகொலைசெய்த ஆயுதாரிகள் அதன் பின்னர் அவரது வீட்டினுள் கைக்குண்டு ஒன்றை வீசியதால் அதுவெடித்தில் நிமலராஜனின் பெற்றோரும் அன்று காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் ஈபிடியினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு குறித்த கொலையை செய்த ஆயுதாரி என்ற சந்தேகத்தில் ஒருவர் குறிப்பிடப்பட்டாலும் இன்று வரை நிமலராஜனின் படுகொலைக்கு நீதி கிட்டவில்லை.

இந்தநிலையில் கனடாவில் நேற்று (18) நிமராஜனின் நினைவுடன் இலங்கையில் கொல்லப்பட்ட அனைத்து ஊடகர்களுக்குமான நீதிகோரலுக்குரிய ஒரு ஒன்று கூடல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜே.கே பாயின் ஆட்கடத்தல் வலையமைப்பு: இஷாரா விசாரணையில் வெளிவரும் மர்மங்கள்!

ஜே.கே பாயின் ஆட்கடத்தல் வலையமைப்பு: இஷாரா விசாரணையில் வெளிவரும் மர்மங்கள்!

3 கிரிக்கெட் வீரர்களை பலியெடுத்த பாகிஸ்தான்...! கட்டாரிலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு

3 கிரிக்கெட் வீரர்களை பலியெடுத்த பாகிஸ்தான்...! கட்டாரிலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026