26 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சம்பவம்!
Sri Lanka Police
Accident
By Pakirathan
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 26 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகாமையில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்களுக்கு இடையில் கட்டுப்படுத்தக்கூடிய இடைவெளி இல்லாமல் இருந்தமையை குறித்த விபத்திற்கான காரணம் என நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சேதங்கள்
இந்த விபத்தினால் வாகனங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அதில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி