நாட்டில் வெகுவாக அதிகரித்த தொழுநோயாளர்கள்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இலங்கையில் (Sri Lanka) இந்த வருடத்தில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் நிரூபா பல்லேவத்த (Nirupa Pallewatte) குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2023 ஆம் ஆண்டில், 1,580 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் 180 பேர் உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
மாற்றுத்திறனாளி தொழுநோயாளிகள்
மேலும் 12% ஆன குழந்தைகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் நோயைப் பரப்பும் திறன் அவர்களிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த ஆண்டு, 8% மாற்றுத்திறனாளி தொழுநோயாளிகளை நாங்கள் சந்தித்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தொழுநோய் தொடர்பில் பொது மக்களிடையே படிப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நேற்று (14) புதிய இணையத்தளம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
தொழுநோய் தடுப்பு இயக்கம் மற்றும் அலையன்ஸ் டெவலப்மெண்ட் டிரஸ்ட் நிறுவனத்தின் கூட்டு முயற்ச்சியில் குறித்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அக்ட்ரூப்ரிவேன்ட் (ACT2Prevent) என்ற பெயரில் இந்த இணையத்தளம் செயற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றத்திற்கான ஒரு முயற்சி
குறித்த இணையத்தளம் வாயிலாகத் தொழுநோய் தொடர்பான விடயங்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழுநோயாளர்கள் சமூகத்தின் பார்வையில் ஒதுக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஆகையால் தொழுநோயார்களுக்கான சமூக அங்கீராத்தை பெற்றுத்தரும் மாற்றத்திற்கான ஒரு முயற்சியாக இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றுத் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல், சிகிச்சைகள் தொடர்பில் விரிவான தகவல்கள் இங்கு பகிரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழுநோயாளர்களின் குறுகிய மனப்பாங்கை இல்லாதொழித்து உரிய சிகிச்சைகளைப் பெற உதவும் வகையில் குறித்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |