2024 வரி வருவாய் தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் வரி வருவாய் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 28.5% அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலானது, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இன்று (12) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
அதன் படி, ஜனவரி முதல் ஓகஸ்ட் இறுதி வரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1,229,245 மில்லியன் ரூபா வரி வருமானத்தை ஈட்டியுள்ளது.
வரி வகைகள்
எவ்வாறாயினும், கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் 956,418 மில்லியன் ரூபா மாத்திரமே பதிவாகியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெருநிறுவன மற்றும் இணைக்கப்படாத வருமான வரி, மதிப்பு கூட்டு வரி, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி, பந்தயம் மற்றும் சூதாட்ட வரி, பங்கு பரிவர்த்தனை வரி மற்றும் பிற வகை வரிகள் போன்ற பல வகையான வரிகளின் கீழ் உள்நாட்டு வருவாய் துறை இந்த தொகையை வசூலித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |