2 ஆம் அலை சுனாமியை போல் இருக்கும்! அநுரகுமார எச்சரிக்கை
Anura Kumara Dissanayaka
Gota Go Home 2022
Gota Go Gama
By Kiruththikan
விரைவில் இரண்டாவது அலை
அரசை விரட்டுவதற்கான இரண்டாவது அலை விரைவில் ஆரம்பமாகும். அந்த அலை சாதாரண அலையாக அல்லாமல், சுனாமி போல் இருக்கும். இலக்கை அடையாமல் ஓயமாட்டோம் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
'இந்த அரசை விரட்டியடிக்க வீதியில் இறங்குவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் அம்பலாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இன்று வரிசைகளில் நிற்கின்றனர். எனவே, கட்சி பேதம் வேண்டாம். நாட்டை மீட்க மக்கள் சக்தியாக ஒன்றிணைவோம் எனவும் தெரிவித்தார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
