தமிழர் பிரதேசத்தில் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல்: மூவர் கைது
கிளிநொச்சியில்(Kilinochchi) காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று(15.12.2024) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ 35 பிரதான வீதியில் உள்ள சுண்டிக்குளம் சந்தியில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
விசுவமடு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை நேற்றிரவு(14) வீதி சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்ட பொழுது தலை கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று சந்தேக நபர்களை மறித்துள்ளனர்.
வீதிச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை சோதனை இடுவதற்கு முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தமது கையில் இருந்த கண்ணாடி போத்திலால் தாக்கியுள்ளார்.
இதன்போது, காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை மூலம் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் தடயப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி டி. எம். சதுரங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |