விபசார விடுதி முற்றுகை:இரு பெண்கள் உட்பட மூவர் கைது
திருகோணமலை-தம்பலகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்மெடியாவ பகுதியில் விபசார விடுதியொன்றினை நடாத்தி வந்த ஆண் ஒருவரும் இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (02) மாலை இடம் பெற்றுள்ளது.
இரு பெண்கள் கைது
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,தம்பலகாமம் -கல்மெடியாவ பகுதியில் தேநீர் கடையொன்றினை நடாத்தி வருவதைப் போன்று விபசார விடுதி நடாத்தி வருவதாக காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த தேநீர் கடையை சோதனையிட்டனர்.
இதன்போது தேநீர் கடைக்கு பின்னால் அறையொன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்கள் கண்டி மற்றும் இரத்தினபுரி பகுதிகளைச் சேர்ந்த 35 வயது உடையவர்கள் எனவும் தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |