சிறிலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு: அமைச்சர் வெளியிட்ட தகவல்
சிறிலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு 3 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி (Nimal Siripala de Silva) சில்வா தெரிவித்துள்ளார்.
அவற்றில் 2 வெளிநாட்டு நிறுவனங்கள் என்றும், எஞ்சியவை உள்ளூர் நிறுவனம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
இது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், இதன்படி ஒரு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு, சிறிலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார்.
பொருத்தமான நிறுவனம்
தற்போது முன்வைக்கப்பட்ட நிறுவனங்களின் நிபந்தனைகளை ஆராய்ந்து பொருத்தமான நிறுவனத்தைத் தெரிவு செய்யும் பணிகளில் விலைமனுக்கோரல் சபையினால் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதனிடையே, சிறிலங்கன் விமான நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக விலைமனு கோரலை சமர்ப்பிக்க வழங்கப்பட்டிருந்த காலப்பகுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலப்பகுதி நீடிப்பு
இந்நிலையில் குறித்த காலப்பகுதியை 45 நாட்களால் நீடிப்பதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், சிறிலங்கன் விமான நிறுவனத்திற்கான முதலீட்டாளரைக் கண்டறிவதற்காக 1.2 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் பெறுமதியை குறைப்பதற்கு உலக வங்கியின் முதலீட்டு ஆலோசனை நிறுவனமான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் எனப்படும் IFC நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |