முல்லைத்தீவில் விபத்தில் சிக்கி மூவர் படுகாயம்!
முல்லைத்தீவில் விபத்தில் சிக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (04-11-2026) இடம்பெற்றுள்ளது.
மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் 15 வது கிலோமீட்டர் பகுதியில் கார் ஒன்று பாலத்தில் மோதியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த மூவரும் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியிலிருந்து மன்னார் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு வழிபாடுகளை நிறைவு செய்து விட்டு அங்கிருந்து மீண்டும் வீடு நோக்கி திரும்பியுள்ளனர்.

இதன்போது மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியின் 15 வது கிலோமீட்டர் பகுதியில் உள்ள பாலத்தில் அவர்கள் பயணித்த கார் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையிலே சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |