நெதன்யாகுவிற்கு விழுந்த பேரிடி: பதவியை தூக்கியெறிந்த இஸ்ரேல் அமைச்சர்கள்
இஸ்ரேல் (Israel) ஹமாஸ் (Hamas) இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள சூழலில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெதன்யாகு (Benjamin Netanyahu) அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகள் செய்துள்ளனர்.
இஸ்ரேல் ஹாமஸ் இடையே கடந்த 2023ம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து அப்போது இஸ்ரேல் நாட்டில் நுழைந்த ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதலை நடத்தியது.
அன்றிலிருந்து மத்திய கிழக்கில் தொடர் தாக்குதல்கள் ஆரம்பமானதுடன் இதுவே இந்த போரின் தொடக்கமாக அமைந்தது.
ஹமாஸ் அமைப்பு
மேலும் அன்றிலிருந்து ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு சூறையாடியது.
இவ்வாறான பின்னனியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டார்.
கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த சின்வாரை இஸ்ரேல் கொன்றது. இது மட்டுமின்றி ஹமாஸ் படையின் பல மேஜர் தலைவர்களையும் கூட இஸ்ரேல் குறிவைத்து கொன்றது.
பதவி விலகள்
ஹமாஸ் தலைவர் உட்படப் பலரும் கொல்லப்பட்டதால் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் சர்வதேச ரீதியில் அதிம் எழுந்தன.
இதற்காக இரு தரப்பிற்கும் இடையே எகிப்து, கத்தார், அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தனாம் செய்து போர் நிருத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் இடாமர் பென்-க்விர் பதவி விலகள் செய்துள்ளார்.
மேலும், தற்போது இஸ்ரேலில் அமைந்துள்ள கூட்டணி அரசில் இடாமரின் ஓட்ஸ்ம் யெஹுடிட் அங்கம் வகித்து வந்த நிலையில், அந்த கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனால் மேலும் இரு அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |