மூச்சு விடத் தொடங்கிய பலஸ்தீனியர்கள் : பணயக்கைதிகளை விடுவித்த இஸ்ரேல்

Benjamin Netanyahu Israel Israel-Hamas War
By Raghav Jan 20, 2025 03:30 AM GMT
Report

இஸ்ரேலின் (Israel) மேற்குகரையில் உள்ள 90 பலஸ்தீனியர்களை விடுதலை செய்துள்ளதாக இஸ்ரேலின் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் (Hamas) உடனான போர் நிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாகவே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த மூன்று பெண் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளதை தொடர்ந்தே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

மூன்று பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

பணய கைதி

இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்தது. இந்த போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்திருந்தது.

மூச்சு விடத் தொடங்கிய பலஸ்தீனியர்கள் : பணயக்கைதிகளை விடுவித்த இஸ்ரேல் | 90 Palestinians Released In Israel

அதன் அடிப்படையில், காசா முனையில் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அதேபோல், காசாவில் தாக்குதலை நிறுத்தவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. போர் நிறுத்தம் மொத்தம் 3 கட்டங்களை கொண்டது.

போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டதுடன், 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்வதாக தெரிவித்தது.

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் டொனால்ட் ட்ரம்ப்

இஸ்ரேல் விடுதலை

இதன் படி நேற்று இஸ்ரேல் நேரப்படி காலை 08.00 மணிக்கு போர் நிருத்தும் நடைமுறைக்கு வரவிருந்தது.

அதேவேளை, ஒப்பந்தப்படி இரு தரப்பும் விடுதலை செய்யப்பட உள்ள நபர்களின் பெயர் விவரங்களை 24 மணிநேரத்திற்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும். 

மூச்சு விடத் தொடங்கிய பலஸ்தீனியர்கள் : பணயக்கைதிகளை விடுவித்த இஸ்ரேல் | 90 Palestinians Released In Israel

அதன்படி, இஸ்ரேல் விடுதலை செய்ய உள்ள 90 பாலஸ்தீனியர்களின் பெயர் விவரத்தை நேற்றே வெளியிட்டுவிட்டது. ஆனால், ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டிய இஸ்ரேலிய பணய கைதிகளின் விவரங்கள் நேற்று மதியம் 2 மணிவரை (இஸ்ரேல் நேரப்படி 10.30 மணி) வெளியிடவில்லை.


இதனால், போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராமல் இருந்தது. இதையடுத்து, காசா முனையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 108 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், சுமார் 2 மணிநேர தாமதத்திற்குபின் விடுதலை செய்யப்பட உள்ள இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் தற்போது வெளியிட்டு 3 பேரை இன்று விடுதலை செய்தது.

இதையடுத்து இஸ்ரேலின் மேற்குகரையில் உள்ள 90 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அறிவிப்பால் நிசப்தமாகிய இஸ்ரேல் போர்: இன்றுடன் தணியும் மத்தியகிழக்கு மோதல்

ஹமாஸ் அறிவிப்பால் நிசப்தமாகிய இஸ்ரேல் போர்: இன்றுடன் தணியும் மத்தியகிழக்கு மோதல்

ஹமாஸ் கதை முடிக்க காத்திருக்கும் இஸ்ரேல் : உடன்படுமா இரண்டாம் கட்ட போர் நிறுத்தம்!

ஹமாஸ் கதை முடிக்க காத்திருக்கும் இஸ்ரேல் : உடன்படுமா இரண்டாம் கட்ட போர் நிறுத்தம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024