யாழில் மற்றுமொரு விபத்து : முதியவர் ஸ்தலத்தில் பலி
Jaffna
Sri Lanka Police Investigation
Accident
Death
By Theepan
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(01.11) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கர வண்டி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
வறுத்தலைவிளான் பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார்
துவிச்சக்கரவண்டியில் பயணித்தவேளை சம்பவம்
கட்டுவன் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் மோதியதில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
விபத்து தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி