யாழில் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான 2 இளைஞர்கள்!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Accident
By Theepan
யாழில் விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (01-11-2026) இடம்பெற்றுள்ளது.
சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 24 வயது இளைஞர்களே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞர் இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மிக வேகமாக பயணித்த வேளை அளவெட்டி அலுக்கை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களையும் மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள தெல்லிப்பழை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி