அமெரிக்காவில் பயங்கரம் - பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி
அமெரிக்காவின் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் அமெரிக்காவின் சென்டியாகோவிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றில் அந்நாட்டு நேரப்படி நேற்று (18) இரவு 11.53 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள் பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்
சந்தேகநபர்களில் ஒருவர் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 17 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களாவர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இஸ்லாமிய மையத்தின் பாதுகாப்பு ஊழியர் என்றும், சம்பவம் மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதி செய்வதில் அவர் ஒரு “முக்கியப் பங்கை” வகித்தார் என்று சான் டியாகோ காவல்துறைத் தலைவர் ஸ்காட் வால் தெரிவித்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் மிகவும் ஆபத்தானதொரு நிலைமையாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது பலத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |