தமிழர் தாயக பகுதிகளில் நடந்த மூன்று கொலைச்சம்பவங்கள் - தொடரும் காவல்துறை விசாரணை(படங்கள்)
நாட்டின் தமிழர் தாயக பகுதிகளில் மூன்று கொலைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி, மூதூர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய காவல்துறை பிரிவுகளில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.
மூதூர் புளியடிச்சோலை கங்குவேலியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு கொலையாக மாறியுள்ளது. கங்வேலி, புளாடிச்சோலையைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவர் மற்றுமொருவரைத் தாக்கியதில் காயமடைந்த நிலையில் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் அத்தியடி
இதேவேளை, கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த சிலர், வீட்டில் இருந்த மூவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
தாக்கப்பட்டவர்கள் படுகாயமடைந்த உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் அத்தியடி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய பெண்ணொருவர் கூரிய ஆயுதம் கொண்டு அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்..
அத்தியடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கலாநிதி (வயது 52) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
குறித்த பெண்ணின் வீட்டில் பணிபுரிந்த நபர் ஒருவர் உந்துருளியில் வந்து இக்கொலையை செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
