பத்மேவின் சகா மனம்பேரி நீதிமன்றத்தில் சரணடையத் தயார் : வெளிவரப்போகும் தகவல்கள்
Sri Lanka Police
Supreme Court of Sri Lanka
Crime
By Sumithiran
மித்தெனிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த "ஐஸ்" என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யத் தேடப்படும் சம்பத் மனம்பேரி, சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகு அவரது பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், அது குறித்து விசாரணை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும் உத்தரவிட்டது.
வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ரிட் மனு
கைது செய்யத் தேடப்படும் சம்பத் மனம்பேரியின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி