கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை : எச்சரிக்கும் சுமந்திரன்

M A Sumanthiran Local government Election ITAK sl presidential election Parliament Election 2024
By Sathangani Sep 15, 2025 11:28 AM GMT
Report

நடைபெற்று முடிந்த தேர்தல்களில் கட்சியினுடைய தீர்மானங்களை மீறி கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருப்பதாக தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக விளக்கம் கோரி கடிதம் அனுப்பபட்டுள்ளதுடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து விலக்கப்படுவார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாறை - ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (14) இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தியாக தீபத்தின் ஆவண காட்சியகத்தை குழப்பும் சைக்கிள் அணி! அம்பலப்படுத்திய மணிவண்ணன் தரப்பு

தியாக தீபத்தின் ஆவண காட்சியகத்தை குழப்பும் சைக்கிள் அணி! அம்பலப்படுத்திய மணிவண்ணன் தரப்பு

விளக்கம் கோரி கடிதம் 

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்கள் சம்மந்தமாக கட்சியினுடைய தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எதிராக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நேரடியாக எங்கள் கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர்.

கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை : எச்சரிக்கும் சுமந்திரன் | Disciplinary Action Against Who Acted Against Itak

அதேவேளை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட சிலர் எங்கள் கவனக்குறைவால் தப்பியுள்ளனர் அவர்களுடைய பெயர்களும் சொல்லப்பட்டுள்ளது. அவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். விளக்கம் கோரி எழுதிய கடிதங்களுக்கு சிலர் பதில் எழுதாமல் இருக்கின்றனர் சிலர் பதில் எழுதி இருக்கின்றனர்.

ஆகவே பதில் எழுதாதவர்கள் அவர்களுக்கு கொடுப்பதற்கு விளக்கம் எதுவும் இல்லை என நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அதை அவர்களுக்கு அறிவிக்கின்றோம். அதற்கு மேலதிகமாக விளக்கம் எழுதப்படாவிட்டால் நடவடிக்கை எடுப்போம்.

கெஹெலிய மற்றும் அவரது குடும்பத்திற்கு நீதிமன்றின் உத்தரவு

கெஹெலிய மற்றும் அவரது குடும்பத்திற்கு நீதிமன்றின் உத்தரவு

ஒழுக்காற்று நடவடிக்கை

அதேவேளை விளக்கம் எழுதியவர்கள் தொடர்பாக அவர்களது விளக்கத்தை ஆராய்ந்து அவர்களை கட்சியின் ஒழுக்காற்று முறைமைக்குள் அவர்கள் குற்றம் செய்தவர்களாக இருந்தால் குற்றவாளிகளாக காணப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் அவர்களை கண்காணிப்பது அல்லது ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதாக இருந்தால் கொடுப்பது என்ற கருத்துக்கள் நிலவி இருக்கின்றன. அது தொடர்பாக ஒவ்வொரு விடயங்களை எடுத்து வெளிப்படுத்துவோம்.

கட்சிக்கு எதிராக செய்யப்பட்டிருக்கின்ற வெவ்வேறு நடவடிக்கை தொடர்பாக பேசப்பட்டது. இதில் ஒரு சிலர் கட்சிக்கு சில முறைப்பாடுகள் கொடுத்துள்ளனர். முறையற்ற முறைப்பாடுகளும் வந்திருக்கிறது. அதற்கு பதில் அளிப்பதாக தீர்மானித்திருக்கின்றோம்.

கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை : எச்சரிக்கும் சுமந்திரன் | Disciplinary Action Against Who Acted Against Itak

அது சம்பந்தமாக செயற்படுகின்றவர்கள் குறித்து கட்சி தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கும். கட்சி நீண்ட கட்டுப்பாட்டுடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கட்டுக் கோப்புடன் கட்சி செயற்பட வேண்டும் என்ற கருத்து அனைவராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே கட்சியின் கட்டுப்பாடு சம்மந்தமாக மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கட்சி தீர்மானத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றவர்களுக்கு எதிராக கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என தீர்மானித்துள்ளோம்” என தெரிவித்தார்.

கொழும்பில் அரச காணியில் அமைந்துள்ள தனியார் ஊடக நிறுவனம் : அரச தரப்பு எம்.பி பகிரங்கம்

கொழும்பில் அரச காணியில் அமைந்துள்ள தனியார் ஊடக நிறுவனம் : அரச தரப்பு எம்.பி பகிரங்கம்


   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025