கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட மூன்று பெண்கள் - நபர் ஒருவர் கைது!
மூன்று பெண்கள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய யகிரல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் எல்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 2 ம் திகதி இத்தேபனையில் பெண்ணொருவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டு உடமைகள் கொள்ளையிடப்பட்டதுடன், கடந்த மாதம் எல்பிட்டியவில் இரண்டு பெண்களை கழுத்தை நெரித்து கொலை செய்து அவர்களது உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
காவல்துறை விசாரணை

குறித்த சம்பவம் தொடர்பாக எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் தொலைபேசி என்பனவற்றை கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்