தாயின் கவனக்குறைவு!! தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி மரணம்
வவுனியாவில் சோகம்
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இன்று மதியம் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த கிருசாந்தன் தட்சாயினி என்ற 3 வயது சிறுமியே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தாயின் கவணக்குறைவு
தண்ணீர் தொட்டிக்கு அருகே பிள்ளையை இருத்திவிட்டு தாய் கச்சான் அறுவடை செய்து கொண்டிருந்த போது சிறுமி அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
கச்சான் அறுவடை செய்து கொண்டிருந்த தாயார் சிறுமியை காணவில்லை என தேடிய போது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுமியை மீட்டு பூவசரன்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே சிறுமி மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
