அமெரிக்காவின் பி-2 ஸ்டெல்த் குண்டுகளுக்கு செக்.! ஈரானுக்கு ஆறுதல் தரும் செய்தி
அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்க பயன்படுத்திய Bunker-Buster எனப்படும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள், பதுங்கு குழிகளுள் ஏவப்பட்ட பிறகு மெதுவான வேகத்தில் சென்று, பாரிய தாக்குதலை முன்னெடுக்கக் கூடியவை.
GBU-57 எனப்படும் இந்த குண்டுகளை பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் மூலம் அமெரிக்கா ஏவியது.
சீனா கண்டுபிடித்த வழி
இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள முன்னதாக ஈரான் தயார் நிலையில் இல்லையென தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சீன விஞ்ஞானிகள் இத்தகைய குண்டுகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறுவதாவது, GBU-57 குண்டின் முன்புற கவசம் மிகத் தடிமனாக இருந்தாலும், அதன் பக்கவட்ட விளிம்புகள் சில சென்டிமீட்டர் தடிமனே கொண்டுள்ளன.
சுவிட்சர்லாந்து ஆயுதம்
இந்த அளவிற்கு குறைந்த பகுதிகளை குறிவைத்து தாக்கினால், குண்டை செயலிழக்கச் செய்ய முடியும் என அவர்கள் விளக்குகின்றனர்.
இதற்கு எந்தவொரு அதிநவீன தொழில்நுட்பமும் தேவையில்லை என்றும், சாதாரண விமான எதிர்ப்பு ஆயுதங்களே போதுமானவை என்றும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அதற்காக, சீனா தங்களது சொந்த ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட Oerlikon GDF எனும் விமான எதிர்ப்பு துப்பாக்கியை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
சீன ஜனாதிபதியும் ஆதரவு
இந்த துப்பாக்கி இரண்டு நொடிகளில் 36 தோட்டாக்களை வெடிக்கச் செய்யும் திறன் கொண்டது. இது 1,200 மீற்றர் தூரத்தில் 42% துல்லியத்துடன் இலக்கை தாக்கக்கூடியது.
ஈரானை போன்ற நாடுகள் இந்த Oerlikon GDF துப்பாக்கியை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன. எனவே, Bunker-Buster தாக்குதல்களுக்கு எதிராக இந்த ஆயுதத்தை பயன்படுத்த முடியும் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சிக்கு சீன ஜனாதிபதியும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
