தற்கொலைப்படைத்தாக்குதல்: பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு
பாகிஸ்தானில் இராணுவமுகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத்தாக்குதிலில் 30 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானின் குவாதர் மாவட்டத்தில் உள்ள கடலோரக் காவல்படை முகாம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று அந்த முகாம்மீது மோதி வெடிக்க வைக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை அமைப்பு பொறுப்பேற்றது.
அனைத்து பக்கங்களில் இருந்தும் முகாம் மீது தாக்குதல்
இந்த தாக்குதலில் கடலோர படை முகாம் முழுமையாக அழிக்கப்பட்டது. தற்கொலை தாக்குதல் நடந்த உடனேயே, எங்கள் அமைப்பின் போராளிகள் முகாமின்மீது அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதலைத் தொடங்கினர்.

இந்தத் தாக்குதல்களில் 30 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளது.
தற்கொலைப்படைத் தாக்குதல் தொடர்பான காணொளி
தற்கொலைப்படைத் தாக்குதல் தொடர்பான 43 வினாடி கொண்ட காணொளி ஒன்றையும் வெளியிட்டது. அதில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பாரவூர்தி ஒன்று முகாமிற்குள் நுழைவதும், அதைத் தொடர்ந்து ஒரு பெரிய தீப்பிழம்பு எழுவதும் பதிவாகி உள்ளது.

ஆனால் இந்த உயிரிழப்பு விவரங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்