பிள்ளையான் - சுரேஷ் சலேவுக்கு இடையிலான தொடர்பு...! சிஐடி-யிடம் கருணா வாக்குமூலம்

Pillayan Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Jul 04, 2026 08:21 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக வார இறுதி சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விசாரணையின் போது பிள்ளையான் தரப்பினருக்கும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கிழக்கு மாகாணத்தில் அவர்கள் இணைந்து மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்த பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதென பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலக்கு வைக்கப்படும் அநுர...! மடகாஸ்கரில் ரகசியமாகத் திரண்ட பாதாள உலகக் கும்பல்

இலக்கு வைக்கப்படும் அநுர...! மடகாஸ்கரில் ரகசியமாகத் திரண்ட பாதாள உலகக் கும்பல்

நிதி உதவிகள் 

பிள்ளையான் தரப்பினருக்கு தங்குமிட வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் சுரேஷ் சலேவினால் அறிமுகப்படுத்தப்பட்ட நபர்களே உதவிகளை வழங்கியதாக கருணா குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையான் - சுரேஷ் சலேவுக்கு இடையிலான தொடர்பு...! சிஐடி-யிடம் கருணா வாக்குமூலம் | Karuna Amman Cid Statement Suresh Salle

இதற்கான நிதி உதவிகள் மற்றும் வசதிகளும் அவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் கருணா ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணா மற்றும் பிள்ளையான் ஆகிய இருவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கி வந்துள்ளனர்.

முள்ளம்பன்றி எப்படி இலங்கைச் சிறுமியின் நண்பனானது - வைரல் காணொளியின் கதை

முள்ளம்பன்றி எப்படி இலங்கைச் சிறுமியின் நண்பனானது - வைரல் காணொளியின் கதை

விரிவான விசாரணை

ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிள்ளையான் - சுரேஷ் சலேவுக்கு இடையிலான தொடர்பு...! சிஐடி-யிடம் கருணா வாக்குமூலம் | Karuna Amman Cid Statement Suresh Salle

இந்த நிலையில் பிள்ளையான் தரப்பினரால் பொலன்னறுவை, வெலிகந்தை பகுதியில் நடத்தப்பட்ட சித்திரவதை முகாம் குறித்தும் குற்றப்புலனாய்வு திணைக்களம் பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.

மேலும், கொழும்பு நகருக்குள் அவர்களின் செயற்பாடுகளுக்கு உதவிய நபர்கள் குறித்த விரிவான விசாரணைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்ணீர் விட்டு அழுத ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் - உணர்ச்சிகரமான காணொளி

கண்ணீர் விட்டு அழுத ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் - உணர்ச்சிகரமான காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026