கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய 300 சட்டத்தரணிகள்! (காணொலி)
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் சார்பாக அதிகளவான சட்டத்தரணிகள் மிரிஹான காவல் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 300 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் தமது சேவைகளை இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விரக்தியடைந்த மக்கள் நேற்றைய தினம் மிரிஹானவில் அமைந்துள்ள அரச தலைவர் இல்லத்திற்கு முன்பாக அயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது போராட்டாக்காரர்களுக்கும் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல்போக்கு ஏற்பட்டதை அடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் காவல்துறையினரினால் 54 பேர் மிரிஹான காவல்துறையினரினால் கைதுசெய்யப்பட்டனர்.
இதனை அடுத்து இன்றைய தினம் குறித்த சட்டத்தரணிகள் இன்று சுமார் 300 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் மிரிஹான காவல் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
