காணாமல் போன மூன்று படகுகள் - 300 ற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் மாயம்
ஆபிரிக்க குடியேற்றவாசிகள் 200 பேரை ஏற்றிய படகு, கெனரி தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் காணாமல் போயுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமல் போன இந்தப் படகில் இருந்தவர்களை தேடும் பணிகளில் ஸ்பெய்னின் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சிறுவர்களும் இருந்ததாக தகவல்

செனகலின் தென் பிராந்தியத்தில் உள்ள கரையோர நகரமான Kafountine இல் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகு புறப்பட்டுள்ளது.
இந்த படகில் பல சிறுவர்களும் இருந்ததாக ஸ்பெய்ன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேபோன்று பலரை ஏற்றிய மேலும் இரண்டு படகுகள் காணாமல் போயுள்ளதாக உதவிக் குழுவொன்று கூறியுள்ளது. காணாமல் போன படகுகளை தேடும் பணிகளில் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஸ்பெய்னின் கடல்சார் மீட்பு சேவைப் பிரிவு கூறியுள்ளது.
300 ற்கும் மேற்பட்டவர்கள்

கடந்த மாதம் 27 ஆம் திகதி சுமார் 200 பேருடன் தற்போது காணாமல் போன படகு, செனலில் இருந்து புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன ஏனைய இரண்டு படகுகள் தொடர்பாக விரிவான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
எனினும் ஒரு படகில் 65 பேர் வரையும் மற்றுமொரு படகில் 60 பேர் வரையும் இருந்துள்ளனர் என உதவிக் குழு தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் காணாமல் போன மூன்று படகுகளிலும் 300 ற்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 53 நிமிடங்கள் முன்