வியட்நாமில் இலங்கை அகதிகள் எடுத்த விபரீத முடிவு - யாழ் இளைஞர் உயிரிழப்பு

Sri Lanka Refugees Jaffna Sri Lankan Peoples
By Kiruththikan Nov 24, 2022 10:30 AM GMT
Report

வியட்நாம்மில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கை அகதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கைக்கு செல்ல முடியாது என கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கை அகதிகள் தற்கொலை செய்ய முயற்சித்திருந்தனர்.

இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததை அடுத்து, அவர் அந்த நாட்டின் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தை

வியட்நாமில் இலங்கை அகதிகள் எடுத்த விபரீத முடிவு - யாழ் இளைஞர் உயிரிழப்பு | 303 Sri Lanka Refugee Detained In Vietnam Has Died

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த ஒருவரே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வியட்னாம் தூதுவராலயம் சார்பாக குடும்பத்தினருக்கு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணம் – சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்திரலிங்கம் கிரிதரன் என்பவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த நபரின் சடலம் தொடர்ந்தும் அந்த நாட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இவருக்கு பிறந்து ஆறு மாதங்களே ஆன பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர 30 லட்சம்

வியட்நாமில் இலங்கை அகதிகள் எடுத்த விபரீத முடிவு - யாழ் இளைஞர் உயிரிழப்பு | 303 Sri Lanka Refugee Detained In Vietnam Has Died

இவர் பொருளாதார சூழல் காரணமாக புலம் பெயர முயற்சித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சடலத்தை மீள வழங்குவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் 30 லட்சம் தொகையை கோருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர வழியறியாது குடும்பத்தினர் தவித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர்

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026