போதைப்பொருட்களுடன் 31 இளைஞர்கள் கைது!
மிரிஹான- மாதிவெல பகுதியில் அமைந்துள்ள "கமத" என்ற இடத்தில் நேற்று (01.11.2025) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 31 இளைஞர்கள் பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
“முழு நாடும் ஒன்றாக” எனப்படும் போதைப்பொருட்களை ஒழிக்கும் தேசிய திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, குறித்த நபர்களை கைது செய்ததாக தெரியவந்துள்ளது.
இந்த நிகழ்வில் 600 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் பறிமுதல்
அவர்களுள், சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுன் விசாரணையின் போது, போதைப்பொருட்களை வைத்திருந்த இளைஞர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் குஷ், கேரள கஞ்சா , சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் ஐஸ் என்பவை உள்ளடங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நீர்கொழும்பு, அனுராதபுரம், காலி, கடுவெல, ஹோமாகம, நுகேகொடை, நுவரெலியா, ஹட்டன் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் 16 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |