ஹமாஸ் வசமிருந்த பணயக்கைதிகளில் 34 பேர் படுகொலை
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளால் பிடிக்கப்பட்ட 130 இஸ்ரேலிய பிணைக் கைதிகளில் 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேரில் 12 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களின் விளைவாக பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் தாக்குதல்
கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் திடீரென புகுந்த ஹமாஸ் அமைப்பினர் 1200 இற்கும் மேற்பட்டவர்களை கொன்று 250 இற்கும் மேற்பட்டவர்களை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றிருந்தனர்.
இதனையடுத்து காசா மீது பெரும் போரை இஸ்ரேல் நடத்தி வருவதுடன் பாரிய உயிரிழப்பு மற்றும் சொத்திழப்பு ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி