இலங்கையில் 18 பேரின் உயிரைப்பறித்த 37 துப்பாக்கிசூட்டு சம்பவங்கள்
இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர், மருத்தவர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடக சந்திப்பில் பேசியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்த 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
இந்த ஆண்டு இதுவரை துப்பாக்கிகள் உட்பட 797 ஆயுதங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 2025-ஆம் ஆண்டில் 2,404 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

"2026-09-14 நிலவரப்படி, மொத்தம் 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்ரெம்பர் 10 வரை, 14 ரி-56 ரக துப்பாக்கிகள், 31 கைத்துப்பாக்கிகள், 25 சுழல் துப்பாக்கிகள் மற்றும் 797 இதர ஆயுதங்கள் உட்பட மொத்தம் 867 ஆயுதங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தெஹிவளை சம்பவம் பிரதான சந்தேக நபர் விரைவில் கைது
2025-ஆம் ஆண்டின் 12 மாதங்களில், மொத்தம் 2,404 ஆயுதங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தெஹிவளை சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முக்கிய சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரை விரைவில் கைது செய்வோம் என நம்புகிறோம்."என மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 13 மணி நேரம் முன்