முதல் மூன்று மாதங்களில் பதிவு செய்யப்பட்ட புதிய வாகனங்கள்
2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 37,463 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (Department of Motor Traffic) பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் உட்பட 20 வாகன வகைகளின் குறித்த வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி குறித்த காலப்பகுதியில் 33,992 மோட்டார் சைக்கிள்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட கார்கள்
ஜனவரியில் 111, பெப்ரவரியில் 92, மார்ச்சில 327 என மூன்று மாதங்களில் 530 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் 195 முச்சக்கர வண்டிகள் உட்பட 20 வாகன வகைகளின் 37,463 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை 2024 ஆம் ஆண்டில், 74,410 வாகனங்கள் புதிய பதிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதன்படி, 65,289 மோட்டார் சைக்கிள்கள், 1644 கார்கள் மற்றும் 83 முச்சக்கர வண்டிகள் உட்பட 20 வாகன வகைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
