சுன்னாகத்தில் பெண்ணின் சங்கிலி அறுப்பு : இராணுவ முகாமில் பணியாற்றியவர் கைது!
By Kajinthan
சுன்னாகம் நகரப் பகுதியில் பட்டப்பகலில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் இன்றையதினம்(25) கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி இராணுவ முகாமில் பணியாற்றிய ஒருவரால் அறுக்கப்பட்டது.
சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு
குறித்த பெண் இது குறித்து சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இந்நிலையில் சந்தேகநபரான, மயிலிட்டி இராணுவ முகாமில் கடமை புரியும் நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சுன்னாகம் காவல் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சி.நிதர்சன் பதவியேற்ற பின்னர் கைது நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


