தமிழர் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வெடிபொருட்கள்
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த எட்டு ஆண்டுகளில் சுமார் 39,134 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுத்து வரும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடிகளையகற்றும் செயற்பாட்டில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் நிதியுதவியுடன் ஸார்ப்( SHARP ) எனப்படும் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
அபாயகரமான வெடிபொருட்கள்
கடந்த எட்டு ஆண்டுகளில் 2,812,768 சதுரமீற்றர் பரப்பளவில் குறித்த வேலைத்திட்டத்தை இந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய, கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2024 மார்ச் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதுவரை 2,812,768 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 39,134 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |