பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பரபரப்பு! அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில், இமாம்கார் பகுதியைச் சேர்ந்த தர்லாய் கலான் பகுதியில் அமைந்துள்ள ஷியா சமுதாய மசூதியில் தொழுகை நடைபெற்று கொண்டிருந்த வேளையில், தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த கொடூர சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 169 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்க தூதரகம் ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அறிவுறுத்தல்கள்
பாகிஸ்தானுக்கு செல்ல திட்டமிட்டுள்ள அல்லது அங்கு வசித்து வரும் அமெரிக்க குடிமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Image Credit: Daily Sabah
மேலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதேவேளை, தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை மீண்டும் பரிசீலித்து, அவற்றை வலுப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலை குறித்து ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், எப்போதும் சரியான அடையாள அட்டைகளை உடன் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேவையான நேரங்களில் அந்நாட்டு காவல் துறைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதையும் அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |