அவுஸ்திரேலியாவில் அதிகாலை நிலநடுக்கம்
அவுஸ்திரேலியாவின் (Australia) கிழக்கு கடற்கரை பகுதியில் 4.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்ள்ளது.
ஐரோப்பிய மத்திய தரைக்கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நில அதிர்வு தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் இருந்து பிரிஸ்பேன் மற்றும் சன்ஷைன் கடற்கரையிலிருந்து கோல்ட் கடற்கரை வரை உணரப்பட்டுள்ளது.
நில அதிர்வு
இதனால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அமெரிக்க பசுபிக் பெருங்கடலில் பாரிய அளவிலான சுனாமி பேரலை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 50 ஆண்டுகளுக்குள் 8 மெக்னிடியூட் அல்லது அதற்கு அதிக அளவிலான நில அதிர்வுகள் ஏற்பட 15 சதவீதம் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 1000 அடி வரை உயர்வான சுனாமி பேரலை அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமைகள் பாரிய அழிவை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்