பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் மாயம் : சர்வதேச கடலில் தேடுதல் நடவடிக்கை

Jaffna India Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar
By Theepan May 31, 2026 03:54 AM GMT
Report

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதுடன், சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பருத்தித்துறை கடலில் மீன்பிடிக்கச் சென்று இதுவரை திரும்பாத நான்கு கடற்றொழிலாளர்கள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: "குறித்த சம்பவமானது மிகவும் வேதனையான ஒன்றாகப் பார்க்கப்படுகின்ற அதேவேளை, தமது உறவுகளைக் காணாது தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆறுதலையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

மக்களை ஏமாற்றும் NPP - ரில்வின் சில்வாவால் வெடிக்கும் சர்ச்சை - சாடும் தமிழ் எம்.பி

மக்களை ஏமாற்றும் NPP - ரில்வின் சில்வாவால் வெடிக்கும் சர்ச்சை - சாடும் தமிழ் எம்.பி

இலங்கை கடற்படை

குறித்த கடற்றொழிலாளர்கள் தொடர்பில் இலங்கை கடற்படையினரின் உதவியுடனும், ராடார் (Radar) கருவிகளின் உதவியுடனும் இலங்கை கடல் எல்லைப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் மாயம் : சர்வதேச கடலில் தேடுதல் நடவடிக்கை | 4 Point Pedro Fishermen Missing Intense Search

இலங்கை எல்லைக் கடற்பரப்புகளில் மேற்கொண்ட தேடுதலில் குறித்த கடற்றொழிலாளர்கள் எவரும் கண்டறியப்படாத நிலையில், இலங்கைக்கான இந்தியத் தூதரகம் ஊடாக இந்தியக் கடல் எல்லைப் பரப்புகளில் தேடுவதற்கான உதவியையும் அனுமதியையும் கேட்டுள்ளோம்.

அமைச்சு மட்டத்தில் கடற்றொழிலாளர்களைத் தேடுவதற்கான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

காற்றின் வேகம் அதிகம்

கடலில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படுவதால், தேடுதல் பணிகள் தடைப்படாமல் இருப்பதற்குப் படைகளின் பூரண ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் மாயம் : சர்வதேச கடலில் தேடுதல் நடவடிக்கை | 4 Point Pedro Fishermen Missing Intense Search

நேற்றைய தினம் (31) தீவகக் கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள், பலத்த காற்றினால் திசைமாறிச் சென்ற நிலையில், உடனடியாக எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுச் சில மணித்தியாலங்களில் பாதுகாப்பாகக் கரை திரும்பியுள்ளனர்.

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்றொழிலாளர்களை எமது கடற்பரப்பிலும் சர்வதேச கடற்பரப்பிலும் தேடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வரும் நிலையில், தனியார் படகுகள் மூலம் சர்வதேச கடல் எல்லைகளில் தேடுவதற்கான அனுமதிகளையும் வழங்கியுள்ளோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.

நள்ளிரவு முதல் அதிகரித்தது எரிபொருள் விலை

நள்ளிரவு முதல் அதிகரித்தது எரிபொருள் விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016