சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய நான்கு முக்கியமான இடங்கள்
விடுமுறை என்றாலே எம் எல்லோருக்கும் சுற்றுலா செல்லுவதில் அலாதி பிரியம் உள்ளது.
ஆனால் நாம், சுற்றுலாவிற்காக தெரிவு செய்யும் இடங்கள் எல்லா நபர்களும் செல்ல கூடிய பொதுவான இடங்களாகவே காணப்படுகின்றது.
உண்மையிலேயே, உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மறைக்கப்பட்ட அழகிய இடங்கள் இருக்கின்றன.
அவை, தனித்துவமான அனுபவங்களையும், சிலிர்க்க வைக்கும் நிலப்பரப்புகளையும், வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் தருகின்றன.
அதேசமயம், அதிக மக்கள் கூட்டம் இல்லாத இடங்கனாகவும் இருக்கின்றன. அப்படி, உங்கள் பயணப் பட்டியலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நான்கு குறைவாக மதிப்பிடப்பட்ட இடங்களை இப்பதிவின் மூலமாக காணலாம்.
எஸ் சௌரா (Essaouira)
மொராக்கோவின் அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள இது அமைதியான வெண்மணல் கடற்கரையையும் துடிப்பான விண்ட்சர்ஃபர்ஸ் விளையாட்டுக்கு ஏற்ற அலைகளை வீசும் கடலையும் கொண்டுள்ளது.
இது ஒவ்வொரு நீர் விளையாட்டு பிரியர்களுக்கும் சொர்க்கமாகும். மொராக்கோ நாட்டின் சிறந்த உணவு வகைகளை இங்கு சாப்பிடலாம்.
அதே போல கைவினை பொருட்களின் சந்தை இங்கே பிரபலமானது.
யகுஷிமா, ஜப்பான்
தெற்கு ஜப்பானில் அமைந்துள்ள யாகுஷிமா ஒவ்வொரு இயற்கை ஆர்வலர்களின் கனவு சொர்க்கமாகும்.
அமைதியான பாசி படிந்த பசுமையான காடு இயற்கை அழகு மற்றும் அமைதியை நாடும் மக்களை உலகளவில் ஈர்க்கிறது.
புகழ்பெற்ற யாகுசுகி சிடார் மரங்கள் , வனப்பாதை வழியாக நடைப்பயணங்கள், குறிப்பாக ஷிரதானி அன்சுகியோ பள்ளத்தாக்கு, யகுஷிமா தீவுகளின் மிக உயரமான சிகரமான மியனூரா மலை என்பன மன அமைதியை தரும்.
வ்ரோக்லா, போலந்து
ஐரோப்பிய நகரங்களான புடாபெஸ்ட், ப்ராக் மற்றும் மாட்ரிட் ஆகியவற்றிற்கு பயணிகள் குவியும்போது, அதிகம் அறியப்படாத ஐரோப்பிய நகரமாக வ்ரோக்லா உள்ளது.
பல்வேறு நாடுகள் மற்றும் பேரரசுகளின் ஒரு பகுதியாக இருந்த வ்ரோக்லா அழகான நகர வரலாறு, துடிப்பான கலாச்சாரம் மற்றும் கண்கவர் கட்டிடக்கலை ஆகியவற்றை கொண்டுள்ளது.
தி சிட்டி ஆஃப் பிரிட்ஜ்
தி சிட்டி ஆஃப் பிரிட்ஜ் என்ற புகழைப்பெறும் சின்ஹா நகரத்தில் 130 க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன.
குறிப்பாக தும்ஸ்கி பாலம் அதில் சுவாரசியமானது. நம் ஊர் கோவில்களில் குழந்தை வேண்டி தொட்டில் வளையல் கட்டுவது போல இந்த பாலத்தில் காதலர்கள் உறுதிமொழி பூட்டுகளை விட்டுச்செல்லும் பழக்கம் உள்ளது.
பாரோ, பூட்டான்
பூட்டன் நம் பயண பட்டியலில் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. ஆனால் ஆசியாவின் சிறந்த சுற்றுலா இடம் அங்கு உள்ளது.
பசுமையான பள்ளத்தாக்குகள் முதல் பனி படர்ந்த மலைகள் வரை, பூட்டானின் கண்கவர் நிலப்பரப்புகள் நிறைய உள்ளன.
அதில் முக்கியமானது பாரோ. பாராவில் மலை ஏற்றம் செய்து மேலிருந்து பார்த்தல் இமயமலை மலைகள் மற்றும் பசுமையான காடுகளின் அற்புதமான காட்சிகளால் சூழப்பட்ட பூட்டானின் அழகை ரசிக்கலாம்.
